100 கோடி வசூலால் சம்பளத்தை தூக்கிய சிம்பு! ஆடிப்போன தயாரிப்பாளர்..

simbu maanaadu kalyanipriyadarshan sjsuriah
By Edward Dec 23, 2021 09:42 AM GMT
Report

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்தது மாநாடு. டைம் லூப் கதையாக மாறுபட்ட கதையம்சத்துடன் எடுத்து நல்ல வெற்றியை கண்டது. மாஸ்டர், அண்ணாத்த, டாக்டர் போன்ற படங்களின் 100 கோடி வசூல் லிஸ்ட்டில் இணைந்துள்ளது மாநாடு படம்.

மாநாடு படத்திற்காக சிம்பு 6 கோடி சூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இப்படத்தின் வெற்றியால் நடிகர் சிம்புவின் மார்க்கெட் அதிகரித்ததால் 6 கோடியில் இருந்து 20 கோடி சம்பளமாக உயர்த்தியுள்ளார். சமீபத்தில் சிம்புவின் கால்ஷீட்டிற்காக தயாரிப்பாளர் லலித் அணுகி பேசியுள்ளார்.

அப்போது தான் தன்னுடைய சம்பளம் 20 கோடி என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் தயாரிப்பாளர் லலித் கிளம்பியுள்ளார். சிம்புவை போன்று கல்யாணி பிரியதர்ஷினி 2 கோடி ரூபாயும், எஸ் ஜே சூர்யாவும் 6 கோடி சம்பளம் வரை உயர்த்தியிருக்கிறார்.