இனிமே மாநாடு படமே லூப்-ல தான் போகும்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

simbu maanaadu sjsuriyah
By Edward Apr 16, 2022 10:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. குட்டி ஸ்டாராக தனது அப்பா டி ராஜேந்தர் படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் வளர வளர திறமை கூட காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

அதன்பின் தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், சிலம்பாட்டம், காளை, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் மூலம் மிகப்பெரிய இடத்தினை தொட்டார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு படப்பிடிப்பிற்கு லேட்டாக வருவது நயன் தாராவுடன் காதல் கிசுகிசு என சிக்கி சினிமா வாழ்க்கையில் தவறான ரூட்டை ஏற்படுத்தி வைத்தார். அதன்பின் அவர் நடித்த படங்கள் எந்த வெற்றியையும் கொடுக்காமல் தோல்விகளையே கொடுத்து வந்தார்.

ஒஸ்தி, போடாபோடி, வாலு, இது நம்ம ஆளு போன்ற படங்கள் படுதோல்வியை கொடுத்தது. இதன்பின் அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், ஈஸ்வரன் போன்ற படங்களிலும் நடித்தார்.

சிம்புவின் கம்பேக் படமாக கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் கதையை மையமாக வெளியான இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமம் வாங்கிய விஜய் தொலைக்காட்சி வரும் ஞாயிறு அன்று இப்படத்தினை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யவுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் மாநாடு படத்தில் தான் டைம் லூப்பாகும், ஆனா விஜய் டிவியில் மாநாடு படமே லூப் மோடில் இருக்க போகிறது என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery