யாரும் கலாய்க்க கூடாது! நாங்களே கலாய்ப்போம்! மாநாடு வாழைப்பழ காமெடி..

simbu senthil goundamani premji maanaadu vazhaipazham
By Edward Dec 23, 2021 10:35 AM GMT
Report

சிம்புவின் கம்பேக் படமாக இருந்து வெற்றியடைந்தது மாநாடு. அப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சிம்பு, எஸ் ஜே சூர்யா காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வைரலாக்கி வருவார்கள்.

ஆனால் மாநாடு படத்தில் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்த பிரேம்ஜி அமரன் மாநாடு படத்தை கலாய்த்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த காட்சியில் கவுண்டமணி - செந்தில் காமெடிகளில் பெரிய ஹிட்டான வாழைப்பழ டயலாக்கினை வைத்து எடிட் செய்துள்ளனர். இதனை பார்த்து ரசிகர்கள் நீங்களே உங்களை கலாய்த்து கொண்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறி வருகிறார்கள்.