மாறன் தோல்விக்கு தனுஷின் விவாகரத்து தான் காரணமா? பல்டி அடித்த இயக்குனர்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். முன்னணி இடத்திற்கு வர தனுஷ் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார் என்பதை அவரே பல மேடைகளிலும் பேட்டிகளிலும் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் நட்சத்திரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருபவராகவும் தனுஷி திகழ்ந்துள்ளார். அதற்கு காரணம் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு பிறகு பிரிந்ததுதான். சில காரணங்களால் இருவரும் பிரிவதாக முடிவெடுத்ததை அடுத்து தங்களின் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். விவாகரத்து சமயத்தில் தான் தனுஷ் மாறன் படத்தில் நடித்திருந்தார்.
அப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக எதிர்மறை விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தினை பற்றி பலர் மோசமான விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், ரைட்டு, உண்மையை சொல்லலாமா என்ற பதிவினை இணையத்தில் போட்டு பின் உடனே டெலீட் செய்துள்ளார்.
இதனை முழுக்க முழுக்க தனுஷை வைத்து தான் கார்த்திக் நரேன் கூறியுள்ளதாக சிலர் தெரிவித்து வருகிறார்கள். அதற்கான உண்மையான காரணம் என்ன என்று அவரே கூறினால் தான் தெரியவரும். ஒருவேலை விவாகரத்து பிரச்சனையால் தனுஷ் மன அழுத்ததில் இருக்கும் போது கதையை மாற்ற சொல்லி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.