அஜித்துக்கு ஜால்ரா அடிக்கும் தயாரிப்பாளர்! ப்ளூ சட்டை மாறனுடன் மல்லுக்கட்டும் ஆர்கே சுரேஷ்..

valimai ajithkumar bluesattaimaran ak61
By Edward Mar 18, 2022 03:28 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றும் கலவையான விமர்சனத்தை பெற்றும் வந்தது வலிமை படம். எச் வினோத் இயக்கி போனிகபூ ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு சில விமர்சனங்கள் அஜித்தின் உடலளவில் கேலி செய்யப்படுவதாக அஜித் ரசிகர்கள் கோபத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்தவகையில் வலிமை படத்தின் விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அஜித்தின் உடல் மற்றும் நடனத்தை பற்றி படுமோசமாக கேலி செய்து விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ரசிகர்களுடன் ஆரம்பத்தில் விவாவதத்தில் ஈடுபட்ட அவருக்கு சமீபத்தில் சினிமா நட்சத்திரங்கள் கூட திட்டி பேட்டியும் வீடியோவையும் வெளியிட்டு வந்தனர். இதற்கு தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் மேடையில் கண்டபடி திட்டியுள்ளார்.

மேலும் உடல் அளவில் யாரை கிண்டல் செய்தாலும் கோபம் தான் வரும். அப்படிதான் அஜித்தை பற்றி பேசியதற்கு எனக்கு கடும் கோபம் வந்து ப்ளூ சட்டை மாறனை திட்டினேன் என்று ஆர்கே சுரேஷ் கூறியிருந்தார்.

இதையடுத்து மூச்சுக்கு முன்னூறு தடவை அஜித்தை பிரமோட் செய்யும் ஆர்கே சுரேஷ் ஜெய்பீம், சார்பட்டா போன்ற படங்கலை ஏன் பிரமோட் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளு சட்டை மாறன்.

இதற்கு ஆர்கே சுரேஷ் ஜெய்பீம், சார்பட்டா படத்தினை பாராட்டி போட்ட டிவிட்டின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.