ரஜினியின் காலில் விழுந்த மாதவன்.. வைரல் வீடியோ

Madhavan Rajinikanth
By Parthiban.A Jul 31, 2022 08:38 AM GMT
Report

நடிகர் மாதவன் இயக்கி நடித்து இருக்கும் ராக்கெட்ரி படம் தியேட்டர்களில் ஓடி முடிந்து சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

ராக்கெட்ரி

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை ராக்கெட்ரி என்ற பெயரில் மாதவன் படமாக்கி இருக்கிறார். இந்த படம் கடந்த ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆகி, உலகம் முழுவதும் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் காலில் விழுந்த மாதவன்.. வைரல் வீடியோ | Madhavan And Nambi Narayanan Meet Rajinikanth

பாராட்டிய ரஜினிகாந்த்

இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் தற்போது மாதவன் மற்றும் நம்பி நாராயணனை தன் வீட்டிற்கே வர வைத்து பாராட்டி இருக்கிறார்.

அந்த சந்திப்பின் போது மாதவன் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று இருக்கிறார். வீடியோவை மாதவனே இன்ஸ்டாகிராமில் வெளியிட அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.