தலைக்கனத்தில் அதிக சம்பளம் கேட்ட மாதவன்!! அசிங்கப்படுத்திய தயாரிப்பாளரை ஓடவிட்ட சாக்லேட் பாய்..
தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக திகழ்ந்து பல பெண் ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகர் மாதவன். பாலிவுட், கோலிவுட் என்று 90 களில் கொடிக்கட்டி பறந்த மாதவன் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
அப்படி ஆரம்ப படம் அலைபாயுதே சூப்பர் ஹிட்டான பின் தன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அப்படி என்னவளே படத்தின் தோல்விக்கு பின் மாதவனை ஒரு தயாரிப்பாளர் சந்தித்து அடுத்த படத்தில் நடிக்க கேட்டுள்ளார்.

அதற்கு மாதவன் சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளார். இதற்குன் முன் நடித்த படம் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர். நீங்கள் என் அழகு மற்றும் நடிப்பை பார்த்து தானே வாய்ப்பு தருகிறீர்கள் என்று நினைத்திருந்தேன், மன்னித்துவிடுங்கள் என்றூ கூறியுள்ளார்.
அதன்பின் அடுத்த படம் ரன் சூப்பர் ஹிட்டாகி வெற்றியை பெற்றது. அப்போது மாதவன் தயாரிப்பாளரிடம், இப்போது என் படம் வெற்றியடைந்திருக்கிறது, நான் கேட்கும் சம்பளத்தை இப்போது கொடுப்பீர்களா என்று கேட்க மிகப்பெரிய தொகையை மாதவன் கேட்டிருக்கிறார்.
அதற்கு தயாரிப்பாளர் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று கூற, நீங்கள் தானே ஒரு படம் தோல்வி அடைந்தால் சம்பளம் குறைவாகத்தான் கிடைக்கும் என்றும் நான் வெற்றியை கொடுத்துள்ளேன் இப்போது தரமுடியாது என்று கூறுகிறீர்களே என்று பதிலடி கொடுத்துள்ளார். தரமுடியாது என்றால் வெளியே சென்று விடுங்கள் என்று மாதவன் தயாரிப்பாளரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்.