வேறொருவருக்கு முத்தம் கொடுத்த நடிகர் மாதவனின் மனைவி? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குடும்பத்தினர்..

Madhavan Actors
By Edward Jun 29, 2022 04:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அலைப்பாயுதே படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் மாதவன். சாக்லெட் பாய் என்று பெயரெடுத்த மாதவன் அடுத்தடுத்த படங்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.

இடையில் பாலிவுட் பக்கம் சென்று மீண்டும் இறுதி சுற்று படத்தின் மூலம் ரீஎண்ட்டி கொடுத்தார். அதன்பின் அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறார். தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி ராக்கெட்ரி என்ற படத்தில் நம்பி நாராயணனாகவே நடித்துள்ளார்.

இப்படத்திற்காக பல கஷ்டங்களை சந்தித்து வந்த மாதவன் முடி, உடல் எடை மற்றும் பல் போன்றவற்றினை மாற்றி அமைக்கவும் கடும்பாடுபட்டுள்ளார். சமீபத்தில் அவரளித்த பேட்டியொன்றில், நம்பி நாராயணனின் வயதான கெட்டப்பில் தனது மனைவியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் மாதவன்.

இந்த புகைப்படத்தை எனது மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பினேன். அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து என் மனைவி என்னிடம் சண்டை கூட போட்டாள் என்று கூறியுள்ளார் நடிகர் மாதவன்.