விஜய்யின் ரீல் தங்கை போடும் ஆட்டம்.. அதுவும் ஏஜென்ட் டீனாவுடன்.. வைரல் வீடியோ

Vijay Madonna Sebastian Leo
By Kathick Nov 01, 2023 04:40 PM GMT
Report

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் விஜய்யின் தங்கையாக பிரபல நடிகை மடோனா சாப்ஸ்டியன் நடித்திருந்தார்.

விஜய்யுடன் இணைந்து நடித்தது மட்டுமின்றி நான் ரெடி தான் பாடலுக்கு நடனமும் ஆடி இருந்தார். இந்நிலையில், இந்த பாடலில் விஜய்யுடன் சிங்கிள் ஷாட்டில் வரும் காட்சியில் நடனமாட நடிகை மடோனா சாபாஸ்டியன் பயிற்சி எடுத்துள்ளார். மடோனா நடன இயக்குனர் வஸந்தியுடன் இணைந்து பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நடனத்திற்காக மடோனா சாபாஸ்டியன் பயிற்சி செய்து வரும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடன இயக்குனர் வசந்தி விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..