வரதட்சனை வாங்காமல் திருமணத்தை முடித்த ரவீந்தர்.. மகாலட்சுமி வீட்டில் கொடுத்தது இதுதான்
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்த மகாலட்சுமி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் இருக்கும் நிலையில் ஃபேட் மேன் என்று கூறப்படும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த திருமணம் நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை விட வைரலாக பேசப்பட்டது என்று கூட கூறலாம். அப்படி வைரல் தம்பதிகளாக பல ஊடகங்களுக்கு ஏன், எதற்கு, எப்படி என்ற பல கோணங்களில் திருமணத்திற்கான விளகத்தை கூறி வந்தனர்.
தற்போது அவர்கள் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தும் வருகிறார்கள். இந்நிலையில் திருமணத்திற்கு மகாலட்சுமி வீட்டில் என்ன செய்தார்கள் என்ற உண்மையை ரவீந்தர் கூறியது வைரலாகியுள்ளது.
திருமணத்திற்கு மகாலட்சுமிக்கு ரவீந்தர், சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டு சேலை, பல லட்சக்கணக்கில் ஆபரணங்கள், அணிகலன்கள், ஆடி கார் என்று பரிசுகளை வாரிக்குவித்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஏற்கனவே என்னிடம் ஆடி கார் இருப்பதாலும் அவருக்காக ஆடி கார் வாங்கி கொடுத்தேன். மேலும் மகா வீட்டில் பலவிதமான பொருட்கள் இருக்கிறது. திருமணத்தில் தனக்கு இரு மோதிரங்கள் மட்டுமே வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன் மகாலட்சுமிக்கு எந்த பரிசும் வாங்கி கொடுத்ததில்லை. அதனால் இனிவரும் காலங்களில் வாங்கி கொடுப்பேன் என்று ரவீந்தர் தெரிவித்துள்ளார்.