நீயெல்லாம் பிராமினா? மனம் நொந்து போன சீரியல் நடிகை ப்ரித்தி.. அப்படி என்ன ஆச்சு
ப்ரீத்தி சஞ்சீவ்
90களில் காதல் திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை ஜோடிகளில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி சஞ்சீவ், சன் டிவியின் லட்சுமி தொடரில் நாயகனாக நடித்து வந்த இவர் பின் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகினார்.
அதேபோல் ப்ரீத்தி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் தொடரில் பாசமான அம்மாவாக, மூன்று முடிச்சு தொடரில் மோசமான மாமியாராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
ப்ரித்தி சஞ்சீவ் ஓபன்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ப்ரீத்தி அவருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட் குறித்து சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார். அதில், "சமூக வலைதளங்களில் முகம் தெரியாது என்பதால் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்கிறார்கள்.
அதில் ஒன்று, நீயெல்லாம் பிராமினா, ஒரு பிராமினாக இருந்து கொண்டு மாமிசம் தொடலாமா, உனக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்பார்கள்.
நான் என்ன பின்பற்றுகிறேன் என்பது எனக்கு தெரியும், ஆனால் இது எதுவும் தெரியாதவர்கள் சிலர் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். நெகட்டீவோ, பாராட்டோ எதுவாக இருந்தாலும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு இதற்கு நான் தகுதியானவளா என்று தான் முதலில் யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.