மகாலட்சுமியுடன் திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது!! பணமோசடியில் கைதான கணவர் ரவீந்தர்..
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை இரு ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி - ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது. விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது திருமணமாகி ஒரு ஆண்டை கழித்திருக்கும் மகாலட்சுமி தன் கணவருடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். ரவீந்தரும் மனைவியை புகழ்ந்து பேசி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்று கூறி முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி பணம் மோசடி செய்துள்ளார் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சினிமாத்துறையில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.