4 அறையில் நடப்பதை இப்படி பதிவிடலாமா? மகாலட்சுமி முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல தொடர்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.
ரகசிய திருமணம்
அதன்பின் ஈஸ்வர் என்ற திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருந்து பின் பிரச்சனைகளை சந்தித்தார். அதையும் விட்டுவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை 2 வருடங்களாக காதலித்து வந்தார்.
ரகசியமாக காதலித்து வந்த இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் திருமணம் மிகப்பெரியளவில் பேசப்பட்டு இணையத்தையே அதிரவைத்தனர். திருமணம் குறித்து விளக்கமும் காரணத்தையும் கூறி இருவரும் தற்போது வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இன்ஸ்டா புகைப்படம்
அப்படியிருக்கையில் இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது மகாலட்சுமி தன் கணவர் ரவீந்தருக்கு கன்னத்தில் இருக்கமாக முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் கடவுளே உனக்கு கண் இல்லையா என்றும் தனிப்பட்ட புகைப்படங்களை ஏன் இப்படி இணையத்தில் பதிவிடுகிறீர்கள் என்று கடுமையாக தாக்கி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.