11 வயசுல கோடியில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் மகள்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கராகவும் சூப்பர் ஸ்டார் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இந்த வருடத்தில் அவர் நடித்த சர்கார் வாரிப்பாட்டலு படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.
அதன்பின் தன் வீட்டில் அம்மா, அப்பா, அண்ணனின் மறைவு மிகப்பெரிய சோதனையை கொடுத்தது. மகேஷ் பாபுவை விட பெரியளவில் பாதிகப்பட்டது மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கட்டமானேனி தான். தாத்தா, பாட்டி மீது அதீத பாசத்தில் இருந்து அவர்களின் பிரிவால் வாடினார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தாரா ஏதாவது ஒரு ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் சித்தாரா நகை விளம்பரத்தில் நடித்திருந்த வீடியோ பிரபல அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் இடம் பெற்றது. இந்த விளம்பரத்திற்காக சித்தாரா சுமார் 1 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறாராம்.
முன்னணி நடிகைகள் கூட ஒரு விளம்பரத்திற்கு லட்சத்தில் தான் சம்பளமாக பெறுகிறார்கள். அப்படி இருக்கையில், 11 வயதான குட்டி நட்சத்திரம் விளம்பரத்தில் மட்டும் ஒரு கோடி சம்பளம் பெற்றுள்ளதை பார்த்து இந்திய சினிமாத்துறையே வாய்ப்பிளந்துள்ளது.