ஒரே பதிலில் வடநாட்டு மீடியாக்களை அலறவிட்ட மகேஷ் பாபு! ரொம்ப தைரியம் தான்
நடிகர் மகேஷ் பாபுவுக்கு அறிமுகம் தேவையில்லை. தெலுங்கு சினிமா சூப்பர்ஸ்டாரான அவரது படங்களை தான் தமிழில் நடிகர் விஜய் ரீமேக் செய்து மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து இருக்கிறார். தமிழ்நாட்டிலும் மகேஷ் பாபுவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது மகேஷ் பாபு சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது மகேஷ் பாபுவிடம் ஹிந்தி படத்தில் எப்போ நடிக்க போறீங்க என ஒரு மீடியாகாரர் கேட்டார்.
அதற்கு அவரை நக்கல் செய்யும் வகையில் பதில் சொல்ல மகேஷ் பாபு "Bollywood can’t afford me. I don’t want to waste my time" என கூறி இருந்தார். பாலிவுட்டால் நான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாது, அங்கு நடித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று மகேஷ் பாபு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஹிந்தி சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
