என்னை சுற்றி தொந்தரவு செய்யும் சூழ்நிலை..அதெல்லாம் சொல்ல முடியாது!..நடிகை மஹிமா நம்பியார் ஓபன் டாக்

Mahima Nambiar Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 05, 2023 10:44 AM GMT
Report

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 வெளிவந்த சட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார்.

இப்படத்தை அருண் விஜய்யின் குற்றம் 23 ஆர்யாவின் மகாமுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மஹிமா நம்பியார் விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நடிகையா இருப்பதால் சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது.

ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் எப்போதும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். என்னை சுற்றி தொந்தரவு செய்யும் சூழ்நிலை இருந்தால் அங்கு இருந்து வந்துவிடுவேண் அதற்காக நான் கோபப்படமாட்டேன் என்று கூறியுள்ளார்.