தொகுப்பாளினி பிரியங்கா கணவரை பிரிய முக்கிய காரணமே இதுதான்!! ரகசியத்தை உடைத்த பயில்வான்
ஸ்டார் விஜய் டிவியின் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. மாகாபா ஆனந்துடன் பல ஆண்டுகளாக இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறார்கள்.
தற்போது பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்றும் வருகிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்திற்கு பின் பிரியங்கா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கியும் வந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே பிரியங்கா கணவரை பிரிந்து அம்மா, சகோதரர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
அதன்பின் 2021ல் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கணவரை பற்றி துளிக்கூட பேசாமல் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கூட கணவரை கண்டுக்கொள்ளாமல் பிக்பாஸ் நண்பர்களுடனும் விஜய் டிவி நண்பர்களுடன் ஊர் சுற்றியும் நிகழ்ச்சியில் பணியாற்றியும் வந்தார்.
இந்நிலையில் பிரியங்கா தன் கணவரை பிரிய முக்கிய காரணம் என்ன என்பதை பயில்வான் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். விஜே பிரியங்கா திருமணத்திற்கு பின்பும் தன் தாயார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
அவரது கணவர் வீட்டிற்கு செல்லாமல் தாயை கவனித்து வந்துள்ளதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிரிவிற்கு இதுதான் முக்கிய காரணம் என்று தெரிவித்திருக்கிறார் பயில்வான்.