கார் விபத்தில் சிக்கிய 48 வயது நடிகை மலைகா அரோரா.. இப்போ எப்படியுள்ளார் தெரியுமா

accident malaika arora
By Kathick Apr 03, 2022 01:25 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மலைகா அரோரா. மும்பைக்கு அருகிலுள்ள பன்வெல் என்ற இடத்தில் இவர் சென்ற ரேஞ்ச் ரோவர் கார் விபத்துக்குள்ளானது.

ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரேஞ்ச் ரோவர் கார் விரைவு சாலையில் சென்று, அங்கிருந்த மற்ற 2 கார்கள் மீது மோதியுள்ளது. விபத்தால் அதிர்ச்சியடைந்த மலைகாவுக்கு நெற்றி மற்றும் கண் அருகே சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சில தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது நன்றாக இருப்பதாகவும் மலைகாவின் நண்பர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கார் விபத்தில் சிக்கிய 48 வயது நடிகை மலைகா அரோரா.. இப்போ எப்படியுள்ளார் தெரியுமா | Malaika Arora Accident