50 வயதில் கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா மலைக்கா அரோரா!! லீக்கான புகைப்படங்கள்...
மலைக்கா அரோரா
90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை மலைக்கா அரோரா. மாடல் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த மலைக்கா கடந்த 1998ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திய மலைக்கா, 2002ல் அர்ஹான் கான் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 2016ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 2017ல் விவாகரத்து பெற்றனர்.
இதனை அடுத்து நடிகை மலைக்கா அரோரா, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தவர் திடீரென பிரிந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
குமார் சங்கரா
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கவ்ஹாத்தியில் நடந்த சென்னை - ராஜஸ்தான் அணியின் ஐபிஎல் போட்டியை மலைக்கா அரோரா பார்த்துள்ளார்.
அங்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளருமான குமார் சங்கரா பக்கத்தில் மலைக்கா உட்கார்ந்து பார்த்துள்ளார். இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

