20 வயதில் மகன்.. பணக்கார பையனுடன் இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை மலைகா அரோரா

Malaika Arora Arjun Kapoor
By Kathick Nov 11, 2022 10:10 AM GMT
Report

மலைகா அரோரா - அர்ஜுன் கபூர்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மலைகா அரோரா. இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருவது அனைவருக்கும். ஆனால் இதுவரை தங்களது காதல் பற்றியோ, அல்லது திருமணம் குறித்தோ எந்த ஒரு தகவலையும் இருவரும் வெளியிடவில்லை.

இந்நிலையில், நடிகை மலைகா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ' நான் சம்மதம் தெரிவித்துவிட்டேன் ' என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும், திருமணத்திற்கு தான் ஓகே சொல்லியுள்ளார் என்று இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

20 வயதில் மகன்.. பணக்கார பையனுடன் இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை மலைகா அரோரா | Malaika Arora Say Yes For Her Second Marriage

நடிகை மலைகா அரோரா கடந்த 1998ஆம் ஆண்டு அப்ராஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் உள்ளார். 19 ஆண்டுகள் ஒன்றாக தனது கணவருடன் வாழ்ந்து வந்த நடிகை மலைகா அரோரா கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டு முதல் கணவரிடம் இருந்து பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.