முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் போன மாதவன் பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..
கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மாளவிகா அவினாஷ். நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தினை அடுத்து சமீபத்தில் கைதி, கேஜிஎப் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தார்.
இந்நிலையில், அவரது ஒரு பதிவில் உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மருத்துவரை பரிந்துரை இல்லாமல் பாரம்பரிய மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அது தலைவலியைவிட வேறு ஒரு பிரச்சனையை கொண்டு செல்லும். அப்படி எடுத்துக்கொண்டால் என்னை போல் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் வந்துவிடும் என்று கூறியதுடன் முகம் வீங்கிய படி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் நடிகை மாளவிகா அவினாஷ்.
