விஜய் பட நடிகை மாளவிகாவிற்கு ஏற்பட்ட விபத்து.. இதுக்கா இப்படி சீன் போட்டீங்க..

accident malavika mohanan
By Kathick Nov 28, 2021 11:47 AM GMT
Kathick

Kathick

Report

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மேலூம் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தை விட இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் தான், ரசிகர்கள் மத்தியில் இவர் வெகுவாக பிரபலமானார்.

இந்நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆம், படப்பிடிப்பின் போது தனக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று புகைப்படத்தை ஷாக்கிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரிய காயம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து புகைப்படத்தை பார்த்த பலரும், கையில் ஏற்பட்டிருந்த சிறிய காயத்தை பார்த்துவிட்டு, இதுக்கா இவ்வளவு சீன்னு, என்று கேட்க துவங்கிவிட்டனர். இதோ அந்த பதிவு