சியான் விக்ரமுக்காக விஜய் பட நடிகை வைத்த சிக்ஸ்பேக்!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Vikram Malavika Mohanan Pa. Ranjith
By Edward May 02, 2023 02:15 PM GMT
Report

மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தப்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

அதன்பின் தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார். மூன்று படங்களும் சரியாக மாளவிகாவிற்கு ஸ்கோப் கிடைக்காமல் போக கிளாமர் ரூட்டிற்கு மாறி இணையத்தில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சியான் விக்ரமுக்காக விஜய் பட நடிகை வைத்த சிக்ஸ்பேக்!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Malavika Mohanan Latest Sixback For Thangalan Shot

தற்போது நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டும் இணையத்தில் வெளியிட்டார் மாளவிகா மோகனன்.

தற்போது தங்கலான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இரு நாட்களில் ஆரம்பமாகவுள்ளது அதற்கான உடற்பயிற்சி ஆரம்பித்துவிட்டேன் என்று கூறி சிக்ஸ்பேக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே அவரது புகைப்படத்தை பார்த்து ஏன் ஒல்லியாகிவிட்டீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு வந்தநிலையில், தங்கலான் படத்திற்காக இப்படியொரு லுக்கில் இருப்பதை பார்த்து அவரை வாழ்த்தி வருகிறார்கள்.