சிக்ஸ்பேக் காமித்து சிலம்பாட்டம்!! நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட வீடியோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். சசிகுமாரின் மனைவி ரோலில் நடித்தப்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
கிளாமர் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார். அந்த படமும் சரியான வரவேற்பை மாளவிகா மோகனனுக்கு கிடைக்கவில்லை.
அதன்பின் ஆல்பம் பாடல்களுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்த மாளவிகா தன்னைவிட குறைவான நடிகருடன் கிறிஸ்டி படத்தில் நடித்தார். தற்போது சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்காக சிலம்பம் மற்றும் உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். தற்போது மொட்டைமாடியில் சிக்ஸ்பேக் காமித்து சிலம்பம் சுற்றும் வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.