லைவ் சாட்டில் மோசமான கேள்வி கேட்ட ரசிகர்!! நடிகை மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி..
மாளவிகா மோகனன்
தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.
தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
மோசமான கேள்வி
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த மாளவிகாவிடம் ஒரு ரசிகர், Virgin or not என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாளவிகா மோகனன், இதுபோன்ற கேவலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேலும் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கும் ஒரு பதிலை வழங்கியுள்ளார் மாளவிகா மோகனன்.


