கவர்ச்சி மட்டுமே காட்டுறீங்க.. நெட்டிசனின் கேள்வியால் கடுப்பான மாளவிகா மோகனன்!!
தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி எனப் பல மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார். மாளவிகா சினிமாவில் நடித்து பிரபலமானதை விட கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டு தான் அதிகம் பிரபலமானார்.
தற்போது மாளவிகா மோகனன், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் சில நாட்களில் பட வெளியாக இருப்பதால் படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளை செய்து வருகின்றனர்.
அடிக்கடி எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவதை மாளவிகா மோகனன் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நெட்டிசன் ஒருவர், ட்விட்டரில் கவர்ச்சி காட்டாமல், தேவையில்லாத ப்ரோமோஷன்களில் ஈடுபடாமல், நீங்கள் எப்போது நடித்து பார்வையாளர்களை கவர போகிறீர்கள்? என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், "உங்கள் கவனத்தை ஈர்க்க நான் நடிப்பைக் கற்றுக்கொள்ளத் தேவையில்லை" என்று பதில் அளித்துள்ளார்.
You’re doing blah blah in my “blah blah promotions” so I clearly don’t need to learn acting to grab your attention ??♀️ https://t.co/e3nGLUXehV
— Malavika Mohanan (@MalavikaM_) August 11, 2024