சென்னை தனிமை என்னை உலுக்கிவிட்டது!! நடிகை மாளவிகா மோகனன் உருக்கமான பதிவு..
மாளவிகா மோகனன்
திரையுலகில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் கடைசியாக ராஜா சாப் படம் வெளிவந்தது.
மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் மாளவிகா. சென்னையில் மார்ச் மாதம் இருந்தது குறித்து இணையத்தில் பெரியளவிலான ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

சென்னை தனிமை
அதில், பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங், மகாபலிபுரத்தின் அழகான கோயில்களுக்கு விசிட், உள்ளூர் உணவுகளை ருசி பார்த்தது என்றும் ஒருநாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு காலியாக இருந்த அறைக்கு சென்றபோது தனிமை தன்னை உலுக்கியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் மும்பைக்கு திரும்பியப்பின் தான் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.