நயன்தாராவை அசிங்கப்படுத்திய நடிகை.. வெச்சு செய்த ரசிகர்களால் மன்னிப்பு கேட்டு பதுங்கிய மாளவிகா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா மேக்கப் போட்டு நடித்ததை கிண்டல் செய்து பேசி இருந்தார். இதற்கு பலர் நயன்தாராவுக்கு சப்போர்ட் செய்து மாளவிகா மோகனனை திட்டி வந்தனர். இது குறித்து நயன்தாராவும் காமெடியாக ரிப்ளை செய்திருந்தார்.
இந்நிலையில் கிறிஸ்டி படத்தில் நடித்துள்ள மாளவிகா, பிரமோஷனுக்காக பேட்டி ஒன்றினை கொடுத்து நயன்தாரா பற்றி பேசியுள்ளார். அதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுவதை நான் ஏற்கவில்லை என்றும் ஆலியா பட், தீபிகா படுகோனே, காத்ரினா கைப் போன்ற நடிகைகள் தங்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுவதில்லை, ஹீரோக்களை எப்படி சூப்பர் ஸ்டார் என்று குருக்கிறோமோ அதேபோல் தான் நடிகைகளையும் சூப்பர் ஸ்டார் என்று கூற வேண்டும் என்று கூறியது நயன்தாரா ரசிகர்களை கோபமாடைய செய்தது.
இணையத்தில் மாளவிகாவை கண்டபடி திட்டிய ரசிகர்களின் கருத்தை பார்த்த மாளவிகா, ஒரு சீனியர் நடிகையாக நயன்தாரா மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். ஒரு தனிப்பட்ட நடிகை நடிகர்களை நினைத்து அந்த கருத்தை கூறவில்லை. அமைதியாக இருங்க என்று கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார்.
