அந்த நடிகருடன் நெருக்கமான காட்சியில் நடித்தது இப்படிதான் இருந்தது!! வெளிப்படையாக கூறிய நடிகை மாளவிகா..
தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர்நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன். இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித், விஜய், ரஜினி, க்மால், சூர்யா போன்றவர்களுடன் எனக்கு நல்ல செளகரியமான சூழல் தான் நிலவியது என்றும் நான் மிகவும் நிம்மதியாக அவர்களுடன் வேலை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமாவில் எனக்கு எந்த அசெளகரியம் தரக்கூடிய மோசமான அனுபவம் நடக்கவில்லை. என் கேரியரில் இரு படங்களுக்கு மிகவும் ஆவலாகவும் சந்தோஷமாகவும் ஷூட்டிங்கிற்கு சென்றேன். கார்த்திக் சாருடன் லவ்லி படத்திலும் அப்பாஸுடன் திருட்டுப் பயலே படத்திலும் தான். அந்தவகையில் திருட்டுபயலே படத்தில் வில்லி போன்ற ரோலில் நடித்தேன்.

சரக்கு பார்ட்டிக்கே ஒரு அறையில் பார் செட்.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்!! நடிகை மகேஸ்வரியின் பிரம்மாண்ட வீடு..
அப்படத்தில் அப்பாஸுடன் நெருக்கமாக நடிக்ககூடிய காட்சிகள் அமைந்தது. அந்த இடத்தில் வேறொரு எந்த கதாநாயகனாக இருந்தாலும் என்னால் அவருடன் மிகவும் செளகரியமாக நடித்திருக்க முடியுமா என்று என்றால் கேள்விக்குறி தான். அப்பாஸும் நானும் பல ஆண்டுகள் தெரிந்தவர்கள், பார்ட்டிகளில் சந்தித்து இருப்பதால் அவருடன் இயல்பாக நடிக்க முடிந்தது என்று நடிகை மாளவிகா கூறியிருக்கிறார்.