காதல்னாலே ஓவர்ரேட்டட் தான்!! காதல் பற்றி தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்..

Dhanush Bollywood Kriti Sanon
By Edward Nov 15, 2025 08:30 AM GMT
Report

தேரே இஷ்க் மே

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி புகழப்பட்டு வருபவர் தான் நடிகர் தனுஷ். ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே போன்ற படங்களை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மே' படத்தில் நடித்துள்ளார்.

காதல்னாலே ஓவர்ரேட்டட் தான்!! காதல் பற்றி தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்.. | Love Is Just Another Overrated Emotion Dhanush

நடிகை க்ரித்தி சனோன் ஹீரோயினாக நடித்த இப்படத்தின் டிரைலர் நேற்று நவம்பர் 14 ஆம் தேதி இரவு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வரும் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள தேரே இஷ்க் மே படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது, மேலும் ஒரு ப்ளஸ்-ஆக அமைந்திருக்கிறது.

காதல்னாலே ஓவர்ரேட்டட் தான்!! காதல் பற்றி தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்.. | Love Is Just Another Overrated Emotion Dhanush

நேற்று மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது தனுஷ் மற்றும் க்ரித்தியிடம் செய்தியாளர்கள் காதஒ என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பினர்.

ஓவர்ரேட்டட் உணர்வு

அதற்கு முதலில், தனக்கு அதைப்பற்றி தெரியாது என்ற தனுஷ் சொல்லும் போது, அருகில் இருந்த க்ரித்தி சனோன் வாயை பிளந்தபடி ரியாக்ஷன் கொடுத்தார். மேலும் பேசிய தனுஷ், அதுவொரு ஓவர்ரேட்டட் உணர்வு தான் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு க்ரித்தி, கண்டிப்பாக ஷங்கர் இப்படி சொல்ல மாட்டார் என்று படத்தின் ரோலில் தனுஷ் பெயரை கூறி சிரித்தார். இப்படி காதல் என்றாலே ஓவர்ரேட்டட் என்று தனுஷ் சொல்ல விவாகரத்தான விரக்தியில் அப்படி சொல்கிறாரா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.