சுந்தர் சி தலைவர்173-ல் இருந்து விலக இதான் காரணம்!! கமல் சொன்ன உண்மை..
தலைவர்173
கமல் ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் தலைவர் 173 படத்தினை இயக்க சுந்தர் சி கமிட்டானதாக கடந்த மாதம் ராஜ் கமல் நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்தனர்.
இதனையடுத்து சில வாரத்துலேயே, தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி, கண்ணியமான முறையில் அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

சுந்தர் சி விலக காரணம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கமல் பதில்
சுந்தர் சி தலைவர்173ல் இருந்து விலக என்ன காரணம்? இணைய வாய்ப்பு இருக்கா? என்ற கேள்வி கேட்டனர். அதற்கு கமல், இணைவது வாய்ப்பு என்கிறது, அவரே பேப்பரில் போட்டு இருக்காரே, அதுதான் அவரின் கருத்து.

என்னுடைய கருத்து, நான் முதலீட்டாளன், என் நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது, அதைத்தான் பண்ணி இருக்கோம். அவருக்கு பிடிக்கும் வரை நாங்கள் கதையை கேட்டுக்கொண்டே இருப்போம்.
புதிய இயக்குநர்கள் வர வாய்ப்பு இருக்கு, கதை நல்லா இருக்கணும் அதுதான், அதுக்கு தான் இன்னொரு கதை தேடிக்கொண்டிருக்கிறோம், எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.