ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் இல்லையா? மமிதா சொன்ன ரகசியம்.. குஷியில் ரசிகர்கள்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 9 - ம் தேதி பொங்கல் ரிலீசுக்கு படத்தை தயார் செய்து வருகின்றனர்.
நேற்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இவர் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இல்லையா?
இந்நிலையில், ஜன நாயகன் படத்தில் விஜய் உடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து வரும் மமிதா பைஜூ விஜய்யின் கடைசி படம் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஷூட்டிங் கடைசி நாளில் விஜய் உடன் பேசும்போது 'ஜனநாயகன் தான் உங்கள் கடைசி படமா' என நான் கேட்டேன்.
விஜய் அதற்கு, தெரியவில்லை தேர்தல் முடிவுக்கு பிறகு பார்க்கலாம்' என கூறினார்" என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் வலம் வருகின்றனர்.
#JanaNaaigan may not be Vijay's final movie. It depends on his election results.
— Trollywood 𝕏 (@TrollywoodX) June 22, 2025
- Mamitha Baiju 😭🤣pic.twitter.com/bEjZSNZUoF