கமலின் விக்ரம் படத்துக்கு வந்த சோதனை? கிழித்து தொங்கவிட்ட நபர்! வைரலாக்கி இயக்குனர்

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 14, 2022 06:35 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி 11 நாட்களாகிய நிலையில் உலகளவில் 300 கோடி வசூலை பெற்றுள்ளது.

இன்னும் அனைத்து தியேட்டர்களிலும் நிரம்பி வழியும் கூட்டத்தால் 500 கோடி வரை இந்த மாதம் வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது. படத்தில் நல்ல விமர்சனங்கள் மக்கள் கொடுத்து வந்தாலும் சிலர் படத்தினை கலாய்த்தும் மோசமாக விமர்சித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் விக்ரம் படத்தின் கதையையும் கமலின் நடிப்பையும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தையும் கேவளமாக விமர்சித்திருக்கிறார் ஒரு நபர்.

இவ்வளவு ஒழுங்கீனமாக எடுக்கப்பட்ட படத்தை நான் சமீபத்தில் பார்த்த நினைவில்லை என்று கூறு ஒரு கட்டுரையாக வெளியிட்ட பதிவினை இயக்குனரும் யூடியூப் விமர்சகருமனா ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார்.

படத்தின் பாசிட்டிங் கருத்துக்களை கூறுவதைவிட நெகடிங் கருத்துக்களை கூறி விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனை ஆண்ட்டி இண்டியன் என்று கூறி கமல் ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.