பல காமெடி காட்சிகளில் நடித்த மேனேஜர் சீனாவா இது... எப்படி உள்ளார் பாருங்க
Tamil Cinema
By Yathrika
மேனேஜர் சீனா நாடகங்களில் நடிக்க தொடங்கி அதன்மூலம் பிரபலம் அடைந்து பின் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என நடித்து வந்தவர் மேனேஜர் சீனா.
3800க்கும் மேற்பட்ட நாடகங்கள், 80க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 80 வயதை எட்டிவிட்டதால் வயது மூப்பின் காரணமாக படங்களில் நடிப்பதையே நிறுத்தியுள்ளார்.
சம்பாதித்த காலத்தில் கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்து தனது மகனிடம் கூட பணம் வாங்காமல் வாழ்ந்து வருகிறாராம். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.