அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிவகார்த்திகேயன் பட நடிகை ஆத்மியா..
நடிகர் சிவகார்த்த்கேயன் நடிப்பில் 2012ல் இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான படம் மனம் கொத்தி பறவை. சூரி, சிங்கம் புலி, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.
ஆத்மியா ராஜன்
மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா ராஜன் நடித்து அறிமுகமாகினார். கேரளாவை சேர்ந்த ஆத்மியா ராஜன்.
வெள்ளத்தோவை என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானர். அதன்பின் போங்கடி நீங்களும் உங்க காதலும், காவியன், வெள்ளை யானை, யூகி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனையடுத்து மலையாளப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2021ல் சனூப் கே நம்பியார் என்பவரை திருமனம் செய்து 2022ல் Shefeekkinte Santhosham என்ற படத்தில் நடித்தப்பின் சினிமாவில் இருந்து விலகினார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு, ஆத்மியாவா இது என்று ரசிகர்கள் அவரை பார்த்து வியந்து வருகிறார்கள்.