பிரபல பின்னணி பாடகி மீது வழக்கு பதிவு.. ரூ. 10 கோடி பண மோசடி..

By Kathick Apr 12, 2026 03:30 AM GMT
Report

தெலுங்கில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் மங்லி. இவர் மீது தற்போது ரூ. 10 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் அதிக வட்டி மற்றும் ரிட்டர்ன்ஸ் தருவதாக கூறி 100 பேரிடம் அவர் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கிறார். ஆனால் வட்டியும் கொடுக்கவில்லை, போட்ட பணத்தையும் கொடுக்கவில்லையாம். அதனால் ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகி மீது வழக்கு பதிவு.. ரூ. 10 கோடி பண மோசடி.. | Mangli Money Alleged Scam

பாடகியிடம் ஏமாந்தவர்கள் சார்பாக வக்கீல் சுப்பாராவ் என்பவர் குற்றவாளிகளிடம் இது குறித்துபேசி இருக்கிறார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது என சொல்லி வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. BNS பிரிவு 351(2) மற்றும் 352 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.