தக் லைஃப் படத்தின் தோல்வி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணி ரத்னம்

Kamal Haasan Mani Ratnam Thug Life
By Kathick Jun 24, 2025 04:30 AM GMT
Report

2025ம் ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தக் லைஃப். நாயகன் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணி ரத்னம் - கமல் ஹாசன் இருவரும் இப்படத்திற்காக இணைந்தனர்.

தக் லைஃப் படத்தின் தோல்வி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணி ரத்னம் | Mani Ratnam Apologizes For Thug Life Movie

இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்தனர். மேலும் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

முதல் நாளே தெரிந்துவிட்டது, இது படுதோல்விதான் என்று. இதனால் உலகளவில் ரூ. 90 கோடி வரை மட்டுமே இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் குறித்து ரிலீஸுக்கு பின் மணி ரத்னம் பேசியுள்ளார்.

தக் லைஃப் படத்தின் தோல்வி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணி ரத்னம் | Mani Ratnam Apologizes For Thug Life Movie

"தக் லைஃப் திரைப்படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். நாயகன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்தாலும், அதே போன்றதொரு படத்தை கொடுக்க தாங்கள் விரும்பவில்லை என்று வேறு மாதிரியான சோதனையை மேற்கொண்ட நிலையில், ரசிகர்கள் நாயகன் படத்தை போலவே எதிர்பார்த்த நிலையில்தான் அவர்களுக்கு ஏமாற்றம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நாங்கள் இருவரும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்" என கூறியுள்ளார்.