20 ஆண்டுகள் கழித்து கமலுடன் ரொமான்ஸ்-க்கு ஓகே!! நயன் தாரா வலையில் சிக்கும் பிரபல பிரம்மாண்ட இயக்குனர்..
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது ஜவான் படத்தின் பிஸி ஷூட்டிங்கில் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் விருதுவிழாக்களில் பங்கு பெற்று வரும் நயன் தாரா, மணிரத்னம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவரது 20 வருட சினிமா வாழ்க்கையில் இன்னும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நிறைவேறவில்லை என்றும் அப்படி அவர் இயக்கத்தில் நடித்து அதற்காக விருது வாங்கவேண்டும் என்ற ஆசையை கூறியிருந்தார் நயன் தாரா.
அந்தவகையில், ரஜினி, அஜித், விஜய், சரத்குமார், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் நடிகர் கமல் ஹாசன் படத்தில் மட்டும் நயன் நடிக்காமல் இருந்து வருகிறார்.
அதற்கு கடிவாளமாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கமல் ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்திருக்கிறது.
அப்படி கமல் - மணிரத்னம் இணைந்தால் அப்படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா தான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. அது மட்டும் நடந்தால் நயன் தாராவின் பல நாள் கனவு நிறைவேறிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.