அஜித்தை கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர், அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா..

Ajith Kumar
By Tony Dec 25, 2023 02:30 PM GMT
Report

அஜித் இவரை பற்றி ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட ஒட்டு மொத்த திரையுலகமும் கொதித்து எழுந்துவிடும். அந்த அளவிற்கு அவருக்கு என்று மிகப்பெரிய நற்பெயர் உள்ளது.

இந்நிலையில் அஜித் தன்னிடம் 5 லட்சம் பணம் வாங்கி கொண்டு கால்ஷிட் தராமல் இழுத்து வருகிறார் என மிக கடுமையான வார்த்தைகளில் திட்டி வருகிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாரயணன்.

அஜித்தை கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர், அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா.. | Manickam Narayanan About Ajith

அதோடு அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா என்று ஒருமையிலும் அவர் பேசி வருகிறார். அப்படியிருக்க பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தன் யூடியூப் சேனலில், அஜித்தின் மேனஜர் இதற்கு உடனே ஒரு முடிவு கட்ட வேண்டும்.

இல்லையென்றால் இது பெரிய பிரச்சனை ஆகிவிடும் என கூறியுள்ளார், அதோடு சிலர் முக்கியமாக அஜித் ரசிகர்கள் சிலர் யூடியூப்-ல் அஜித் அதை செய்தார், இதை செய்தார், தமிழக அரசையே அஜித் தான் நடத்துகிறார் என்பது போல் பேசுவதையும் குறைக்க வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.