மோதிரம் எடுத்தியான்னு கேட்டு திருட்டுப்பட்டம் கட்டிய சக ஊழியர்..மணிமண்டன் வேதனை...
மணிமண்டன்
உதவி இயக்குநராக இருந்து பின் மிமிக்ரி கலைஞர், உதவி இயக்குநர், வசனம் எழுதுபவர், நடிகர் என பன்முகத்திறமையை கொண்ட மணிகண்டன், பல படங்களில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவர் நடிப்பில் மக்கள் காவலன் என்ற படம் டிசம்பர் 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்திய பேட்டியொன்றில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் ஓரிடத்தில் வேலை செய்தேன், வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே கோளாறாக இருந்தது. அப்போது கூகுள் மேப் எதுவும் இல்லை. அதனால் அந்த ஆபீஸிலிருந்த நபரை தொடர்பு கொண்டு பேசி வழிக்கேட்டேன். உள்ளே சிக்னல் கிடைக்கவில்லை என்று அவர் வெளியே வந்தார்.
அந்த அலுவலக கதவு தானாக கூடிக்கொள்ளும். அதனால் லாக்காகிவிட்டது. இப்போது உள்ளே இருப்பவர்களால் வெளியேயும், வெளியே நிற்கும் எங்களால் உள்ளேயும் செல்ல முடியவில்லை. எல்லாரும் இந்த பையனுக்கு கெட்ட நேரம் போல என்னை சொன்னார்கள். அன்று அந்த கதவை உடைக்க வேண்டியதாகிவிட்டது.

திருட்டுப்பட்டம்
ஒரு வாரம் சென்றிருக்கும், அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த நபருடைய மோதிரம் காணாமல் போய்விட்டது. அவர் வேறு யாரிடமும் எதுவும் கேட்கவில்லை, தேடவும் இல்லை. நேரடியாக என்னிடம் வந்து எடுத்திருந்தால் மோதிரத்தை கொடுத்துவிடு என்று சொன்னார். எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. என் பேக் இங்கதான் இருக்கிறது, நானும் இருக்கிறேன், தேடிப்பாருங்கள், மோதிரம் கிடைத்தால் வேலையை விட்டு சென்று விடுகிறேன் என்று கோபத்தில் சொல்லிவிட்டேன். அந்த மோதிரம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
என்னை கிளம்ப சொன்னார்கள், நான் இங்கேயே தான் இருப்பேன், அதெல்லாம் முடியாது என்று பிடிவாதமாக இருக்க, மற்றவர்கள் பேசி என்னை விட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். 3 நாட்கள் கழித்து அந்த நபர் என்னிடம் வந்து மோதிரம் அலுவலகத்தில் கிடந்ததை சொல்லி, என்னிடம் மன்னிப்பும் கேட்டார். யார் வேண்டுமானாலும் சந்தேகம் வருவது தவறில்லை, ஆனால் நேரடியாக என்னைப் பார்த்து எடுத்தியா என்று கேட்டது தான் கஷ்டமாகிவிட்டது என்று மணிகண்டன் பகிர்ந்துள்ளார்.