மணிமேகலை பஞ்ச் வசனம்.. பிரியங்காவிற்கு பதிலடியா? வீடியோ ட்ரெண்டிங்

Manimegalai TV Program Dance Jodi Dance
By Bhavya Jun 13, 2025 03:30 AM GMT
Report

மணிமேகலை 

விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த மணிமேகலை ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.

அதன்பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

மணிமேகலை பஞ்ச் வசனம்.. பிரியங்காவிற்கு பதிலடியா? வீடியோ ட்ரெண்டிங் | Manimegalai About Friends Video Viral

பதிலடியா? 

இந்நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவில் கடந்த வாரத்தில் தர லோக்கல் குத்து ரவுண்டு நடைபெற்றது. அதில் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து மட்டும் வழங்காமல் போட்டியாளர்களோடு சேர்ந்து ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்.

அந்த வீடியோவின் ஆரம்பத்தில் மணிமேகலை பேசும் வசனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, அங்கிருக்கும் நடன கலைஞர்கள் மணிமேகலையிடம் ' எப்படி உங்களை மட்டும் இங்கிருக்கும் எல்லாரும் பாசமாகவும் மாஸாகவும் பார்க்கிறார்கள்' என்று கேட்டனர்.

அதற்கு மணிமேகலை, " நம்மை விரோதியாக பாக்குறவங்களை கூட நாம் நண்பனாக தான் பார்க்க வேண்டும். ஏன்னா நம்முடைய டீமே நட்பே துணை" என்று பேசியுள்ளார்.

தற்போது, இந்த வீடியோவின் கீழ், அதிகமான ரசிகர்கள் மணிமேகலையின் பஞ்ச் வசனம் செம என்று பாராட்டி வருகின்றனர்.