கர்ப்பமாக இருக்கிறேனா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி மணிமேகலை

Star Vijay Cooku with Comali Manimegalai
By Edward Apr 01, 2023 10:13 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனல் மூலம் விஜே-வாக பணியாற்ற ஆரம்பித்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் மணிமேகலை. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை ஹுசைன் என்பவரை குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் சிறப்பாக வாழ்க்கையை கணவருடன் வாழ்ந்து வந்த மணிமேகலையின் கேரியருக்கு முக்கிய இடத்தை கொடுத்தது குக் வித் கோமாளி. நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசனில் கலந்து கொண்டு பல லட்ச ரசிகர்களை ஈர்த்து வந்தார் மணிமேகலை.

manimegalai pregnant

சமீபத்தில் சில காரணங்களால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிவிட்டார். இதற்கான காரணம் என்ன என்று கூட கூறாமல் நின்றது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது கணவருடன் சேர்ந்து சொந்த ஊரில் சில தொழில்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு மணிமேகலை, நோ, அதெல்லாம் வதந்தி. நான் கர்ப்பமாக இல்லை. எந்த செய்தியாக இருந்தாலும் 4 யூடியூப் சேனல்கள் சொல்லி தான் உங்களுக்கு தெரியுற மாதிரி இருக்காது, நானே சொல்லுவேன் என்று பதிலளித்தார்.

மேலும், நான் இன்னும் விஜய் டிவியில் தான் இருக்கிறேன், ஏப்ரல் மாதத்தில் சிறப்பு பட்டிமன்றத்தில் என்னை அடுத்து பார்க்கலாம் என்று மணிமேகலை தெரிவித்துள்ளார்.

GalleryGallery