மணிமேகலை CWC-ஐ விட்டு போக இதுதான் காரணமா!! வெளியான உண்மை தகவல்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி மூலம் பல விஜய் டிவி பிரபலங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு சினிமாத்துறையில் கிடைத்திருக்கிறது.
புகழ், பாலா, குரேஷி, ஷிவாங்கி போன்றவர்களை போன்று பெரியளவிற்கு வாழ்க்கையை மாற்றியவர் விஜே மணிமேகலை. எஸ் எஸ் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன்பி விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றி வந்தார்.

நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் கணவருடன் சேர்ந்து தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்த்திராத வகையில் இனிமேல் குக் வித் கோமாளியில் நான் இல்லை என்று கூறி ஒரு பதிவினை இணையத்தில் பகிர்ந்தார்.
திடீரென நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலக என்ன காரணம் என்று அவரது ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். நிகழ்ச்சி குழுவினர் மீது ஏதாவது பிரச்சனையா அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல விதமான கேள்விகள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியை விட்டு விலகியுள்ளார் என்ற பரவலான தகவல் பரவி வருகிறது. இதற்கான உண்மையான காரணம் மணிமேகலையே கூறினால் தான் தெரியவரும் என்று சின்னத்திரையில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
