போதும்டா சாமி இனிமே உன்ன நம்பி வர முடியாது? மணிரத்னத்தை அலையவிட்ட ஐஸ்வர்யா ராய்..

maniratnam jeyamravi PonniyinSelvan AishwaryaRai
By Jai Mar 20, 2022 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் மணிரத்னம் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து மாபெரும் காவியமான பொன்னியின் செல்வன் என்ற படத்தினை எடுத்து வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் கதாபாத்திர புகைப்படங்களை மணிரத்னம் வெளியிட்டிருந்தார்.

இரு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்த நிலையில் நட்சத்திரங்கள் தங்களின் அடுத்த படங்களில் வேலைகளில் கவனம் செலுத்து வருகிறார்கள். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தன போஷன் முடிந்த நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்றுவிட்டார்.

ஜெயம் ரவியின் நீண்டளவில் வளர்த்து வைத்திருந்த முடியை வெட்டி மற்ற படங்களுக்கு சென்றுவிட்டார். ஆனால் இவ்விருவரின் காட்சிகள் விடுபட்டு போனதால் இருவரையும் மீண்டும் படப்பிடிப்பிற்கு வர மணிரத்னம் அழைத்துள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் என்னால் மீண்டும் அங்கு வரமுடியாது, வேண்டுமென்றால் நீங்கள் இங்கே வாருங்கள் என்று அலையவிட்டுள்ளார்.வேறு வழியில்லாமல் மணிரத்னம் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு மும்பைக்கு சில குழுவுடன் சென்றுள்ளார். ஜெயம்ரவிக்கு விக் போடப்பட்டு நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.