கஷ்டத்தில் இருக்கும் போது நம்பவைத்து ஏமாற்றினார் மணிரத்னம்! புலம்பிய பிரபல இயக்குநர்..

maniratnam ponram navarasa gauthamkarthik
By Edward Nov 07, 2021 12:30 PM GMT
Report

கொரோனா லாக்டவுனால் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் எந்த பணியும் இல்லாமல் பணக்கஷ்டத்தில் இருந்து வந்தனர். அப்படி அவர்களுக்கு உதவும் வகையில் ஆந்தாலஜி படத்தினை தயாரிப்பதாக இயக்குநர் மணிரத்னம் 9 கதைகளை 9 இயக்குநர்களை வைத்து இயக்கவைத்து நவரசா என்ற தலைப்பில் வெளியிட்டார்.

சில கதைகள் மட்டும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் தனக்கு உதவி செய்வதாக கூறி மணிரத்னம் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், அரவிந்த்சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன், ரதீந்திரன் பிரசாத், வஸந்த் சாய் என்பவர்களை வைத்து உருவாக்கினார்.

ஆனால் நகைச்சுவை கடையாக ரசனத்துடன் இல்லை என்று இயக்குநர் பொன்ராமின் கதை வேண்டாம் என்று கூறி பிரியதர்ஷன் கதையை ஓகே சொல்லி கதையை சேர்த்தார். இதற்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நம்பவைத்து ஏமாற்றியது போல் பாணியில் கூறியுள்ளார் பொன்ராம்.

இதுவரை என் கதையை நிராகரித்து தூக்கி எரிந்த காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் அப்படத்தில் நடித்த பலருக்கு மிகுந்த ஏமாற்றத்தை வருத்தத்தை கொடுத்தது என்று கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery