ஷூட்டிங்கில் சீனு ராமசாமி கொடுத்த டார்ச்சர்!! 9 ஆண்டுகள் கழித்து வாய்த்திறந்த நடிகை..
பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சீனுராமசாமி, லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2014ல் இடம் பொருள் ஏவல் என்ற படத்தினை இயக்கினார். ஆனால் இப்படம் 9 ஆண்டுகளாகியும் திரையில் வெளியாகவில்லை. விஜய் சேதுபதி, விஷ்ணுவிஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முதலில் இப்படத்தில் நடித்த நந்திதா கதாபாத்திரத்தில் நடிகை மனிஷா யாதவ் தான் நடித்திருந்தார். இடையில் சீனுராமசாமி கொடுத்த டார்ச்சர் தான், மனிஷா இப்படத்தில் இருந்து விலகியதாக, அப்போதே என்னிடம் கூறினார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறினார்.
இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், சீனுராமசாமி இதற்கு மறுப்பு தெரிவித்து, இவங்க தான் என்னால சினிமாவை விட்டே போய்விட்டேன் என்று ஒரு அண்ணன் கூறுகிறார் என்றும் குப்பை கதை ஆடியோவிழாவில் நன்றி சொல்றாங்க 10 ஆண்டு நடிச்சிட்டு போயிருக்காங்க, திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க, இடம் பொருள் ஏவல் படம் விரைவில் வரும் என்று கூறியிருந்தார்.
இதற்கு நடிகை மனிஷா யாதவ், அவரது சமுகவலைத்தள பக்கத்தில் ஒரு விளக்கம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், குப்பை கதை ஆடியோ லான்சில் சீனு ராமசாமி மேடையில் அமர்ந்திருந்ததால் தான் எல்லோருக்கும் நன்றி சொன்னதை போல் அவருக்கு நன்றி சொன்னேன்.
எதையும் மாற்றமுடியாது, 9 வருடங்களுக்கு முன் நான் என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டவரிடம் எப்படி மறுபடியும் வேலை செய்யமுடியும். சீனுராமசாமி உண்மையை தெரிந்துக்கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார் நடிகை மனிஷா யாதவ்.
