தேவயாணி திமிராக செய்த விஷயம்.. மணிவண்ணன் ஒரே வார்த்தை கேட்டு கொடுத்த நோஸ்கட்

Devayani
By Parthiban.A Aug 02, 2022 07:00 PM GMT
Report

நடிகை தேவயானி ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அஜித், விஜய், சரத்குமார் என பல நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். தற்போது திருமணமாகி குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஒரு படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டில் கேமராமேன் அவரை தேவயாணியை பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார். அதை கேட்டு தேவயாணி கடும் கோபம் ஆகி இருக்கிறார். இயக்குனர், ஒளிப்பதிவாளர் மட்டுமே என்னை பெயர் சொல்லி அழைக்கலாம்.. மற்றவர்கள் என்னை மேடம் என்று தான் அழைக்க வேண்டும் என கோபமாக கூறினாராம். இது பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது.

தேவயாணி திமிராக செய்த விஷயம்.. மணிவண்ணன் ஒரே வார்த்தை கேட்டு கொடுத்த நோஸ்கட் | Manivannan Reply To Arrogant Devayani

சில நாட்களுக்கு பிறகு ஷூட்டிங் வந்த நடிகர் மணிவண்ணன் நேராக தேவயானியை பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம். 'பெயர் எதற்காக வைக்கிறார்கள். சொல்லி அழைப்பதற்கு தானே' என கேட்டு நோஸ்கட் கொடுத்து இருக்கிறார். மணிவண்ணன் இது பற்றி தேவயானிக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.

அதற்கு பிறகு தான் தேவயானி தவறை உணர்ந்து அந்த ஸ்டில் போட்டோகிராபரிடம் மன்னிப்பு கேட்டாராம்.