திருமணமாகி 4 மாதத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகை மஞ்சிமா மோகன்
மலையாள சினிமாவில் இருந்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன்.
மலையாள படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த மஞ்சிமா மோகன், நடிகர் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார்.
அதன்பின் தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தின் மூலம் இருவருக்கும் ரகசிய காதல் இருந்து வந்துள்ளது.
கடந்த ஆண்டு திடீரென இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று பிரஸ் மீட் வைத்தனர்.
கடந்த 2022 நவம்பர் 28 ஆம் தேதி சாதாரண முறையில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை கேலி செய்து வந்தது பற்றி ஓப்பனாக பேசியிருந்தார்.
தற்போது திருமணத்திற்கு பின் 4 மாதமாகிய நிலையில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படத்தை மஞ்சிமா மோகன் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.