கல்யாணத்துக்கு முன் 3, 4 மாசம் வெளியவே போகல!! Body Shaming-ஆல் கஷ்டப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன்..

Gautham Karthik Manjima Mohan Gossip Today Tamil Actress
By Edward Jun 27, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் நடிகையாக நடித்து பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன், சமீபத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் தான் குண்டாக இருப்பதை பார்த்து பலரும் கேலி செய்ததாகவும் அதற்கு பதிலடி கொடுத்து கருத்துக்களை பகிர்ந்ததாகவும் செய்திகள் வந்தது. சமீபத்தில் அளித்த பின் திருமணத்திற்கு பின் தன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.

கல்யாணத்துக்கு முன் 3, 4 மாசம் வெளியவே போகல!! Body Shaming-ஆல் கஷ்டப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன்.. | Manjima Mohan Open Body Shaming After Marriage

நான் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிரச்சனையாகவே வந்துவிடும். இப்படி இருப்பதால் எனக்கு நன்றாக இருக்கிறது, நான் யார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். எனக்கு டான்ஸ் பிடிக்கும், 5 வயதில் இருந்து நான் அதை செய்து வருகிறேன், அதனால் டான்ஸ் ஆடி வீடியோ போட்டு வருகிறேன்.

ஆனால், ஒரு இடத்திற்கு கெளதமுடன் சென்றால் அதை நான் சோசியல் மீடியாவில் பதிவிடமாட்டேன். அதில் கமெண்ட் செய்பவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை, எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். எதுவும் சோசியல் மீடியாவில் போடவில்லை என்றாலும், ரெண்டு பேரும் ஒன்றாக இருக்காங்கலா என்று கூட பேசுவாங்க. கல்யாணம் முடித்து பொங்கல் சமயத்தில் கூட ஏன் இருவரும் போட்டோ போடவில்லை என்று கேட்டார்கள்.

கல்யாணத்துக்கு முன் 3, 4 மாசம் வெளியவே போகல!! Body Shaming-ஆல் கஷ்டப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன்.. | Manjima Mohan Open Body Shaming After Marriage

மேலும் பேசிய மஞ்சிமா மோகன், சம்பிள்-ஆக நடந்த திருமணம் குறித்தும் பலர் மோசமான செய்திகளை பகிர்ந்தார்கள். அதனால் எனக்கு கோபம் வந்தது, இல்லை என்றால் பொய்யாகிவிடுமா?. நான் அழுதி இருக்கிறேன். இந்த கல்யாணம் ஏன் பண்ணோம் என்கிற அளவிற்கு கோபம் வந்தது. அப்போது எனக்கு கெளதம் ரொம்பவும் சப்போர்ட் ஆக இருந்தார். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறிய போது என் பெற்றோர்கள் கஷ்டப்பட்டார்கள்.

உடல் எடையை ஏற்றியதால் கர்ப்பம் என்று கூறுவார்கள். அதைவிட, கூறிய பல மோசமான கருத்துக்களால், 3 மாசம் வெளியில் வராமல் பேட்டி கொடுக்காமல் இருந்தேன். ஏனென்றால் நான் கோபமாக இருக்கும் போது தப்பாக பேசிவிடுவேன்னு பயம் இருந்தது. அதனால் தான் 6 மாதம் பிரேக் எடுக்க முடிவெடுத்தேன். யார் என்று தெரியாத ஒருவர் இப்படி செய்தி போடுவதால் பல விஷயங்களை யோசித்து வந்தேன் என்று மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

கல்யாணத்துக்கு முன் 3, 4 மாசம் வெளியவே போகல!! Body Shaming-ஆல் கஷ்டப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன்.. | Manjima Mohan Open Body Shaming After Marriage

என்னை யார் எங்கயாவது கூப்பிட்டால் கெளதமை அனுப்பிவிடுவேன், நான் போகமாட்டேன். இப்படி இருக்கிறார், என்று பலர் அப்படி கேட்பார்கள். அப்போது நான் உட்கார்ந்து சாப்பிடுவேன். திருமணத்திற்கு முன் நடந்த அந்த பிரச்சனை, திருமணத்திற்கு பின் அப்படியே மாற்றியது என்று பல விஷயங்களை போல்ட்டாக பேசியிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன்.