5 கோடி பட்ஜெட்.. 60 கோடி வசூல், தமிழகத்தில் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்
மஞ்சுமெல் பாய்ஸ்
லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று தென்னிந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனையை செய்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இன்று தமிழகத்திலும் பட்டையை கிளப்பி வருகிறது.
உண்மையாகவே நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கமல் ஹாசனின் குணா படத்தை, மஞ்சுமெல் பாய்ஸ் படத்துடன் இணைத்து அவர் செய்த மேஜிக் திரையரங்கில் வேற லெவலில் ஒர்கவுட் ஆனது.
இப்படத்தை பார்த்துவிட்டு, மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார் கமல் ஹாசன். மேலும் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்றவர்களும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரை நேரத்தில் சந்தித்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
வசூல் சாதனை
இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் உலகளவில் இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 15 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாம். மலையாளத்தில் வெளிவந்து, தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ் செய்துள்ளது.
ஆம், இதுவரை கேரளாவில் இருந்து தமிழகத்தில் ரிலீசான திரைப்படங்களிலேயே, அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்றால் அது, சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் தான் என கூறப்படுகிறது. இதை ரசிகர்களுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவும் கொண்டாடி வருகிறார்கள்.